TN Public Exam Result Date 2023 | பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி அறிவிப்பு
TN Public Exam Result Date 2023
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தோ்வு முடிவு வெளியாகும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சற்று முன் அறிவித்துள்ளார்.
அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17ம் தேதியும், 11ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Read Also: 12ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி 2023
இதேபோன்று, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாக பள்ளி கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். எழுத்து தேர்வு தேதிக்கும், செய்முறை தேர்வு தேதிக்கும் நாட்கள் குறைவாக இருப்பதால் முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
(Source : Way2News)