TN Private Candidates Hall Ticket Download 2023 | தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
TN Private Candidates Hall Ticket Download 2023
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெறும் மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) மற்றும் இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை 28.2.2023 அன்று பிற்பகல் முதல்
http://dge1.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி
தனித்தேர்வர்கள்
http://dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று முதலில் Hall Ticket என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “Higher Secondary First Year / Second Year – March / April 2023 Private Candidate Hall Ticket Download என்ற வாசகத்தினை Click செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினை (Date of Birth) பதிவு செய்து அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வர்களுக்கும் சேர்த்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும். தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் காணலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.