TN Plus2 Tamil Exam News | பிளஸ் 2 தமிழ் தேர்வு கடினம்
TN Plus2 Tamil Exam News
பிளஸ் 2 மாணவர்கள் நேற்று நடந்த தமிழ் தேர்வில் ஒரு வினாக்கள் கடினமாக இருந்ததாக புலம்பியுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. முதல்நாளான தமிழ் தேர்வில், சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தேர்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு குறித்து மாணவர்கள் கூறும்போது, இந்த தேர்வு 90 மதிப்பெண்களுக்கு நடந்தது. தேர்வு எளிதாக இருக்கும் என நினைத்து தேர்வு அறைக்கு சென்றால், வினாத்தாள் படித்த பிறகு அதிர்ச்சிதான் மிஞ்சியது. குறிப்பாக 14 -ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அதில் ஒரு 4 ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமே பாட பின்பகுதி வினாக்களில் இருந்து கேட்கப்பட்டன. அது மட்டும்தான் எளிதாக இருந்தது. மீதம் உள்ள 10 வினாக்கள் பாடப்பகுதியில் இருந்து நேரடியாக கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
என்ன செய்வதென்று தெரியாமல், பத்து கேள்விகளுக்கும் கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஏதோ ஒரு விடையை தேர்வு செய்து எழுதினோம். எங்களை பொறுத்த வரை இந்த தேர்வு கடினம்தானம்,
இவ்வாறு அவர்கள் கூறினார்.
Read Also: தேர்வர்களுக்கு கடும் எச்சரிக்கை
தமிழ் ஆசிரியர் ஒருவர் கூறும்போது, மாணவர்கள் மனப்பாட முறையை தவிர்க்கும் வகையில், 20 சதவீதம் மதிப்பெண்களுக்கு பாடத்தில் எந்த பகுதியிலிருந்தும் கேள்வியை தயார் செய்ய தேர்வுத்துறை கடந்த 2018ஆம் ஆண்டு முதல் துவங்கி விட்டது. ஆனால், இதுதொடர்பான போதிய விழிப்புணர்வை ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த தவறுகிறார்கள்.
அவர்கள் மனத்திறனை சோதிக்கும் வகையில், இதுபோன்ற வினாக்கள் தயார் செய்யப்படுகின்றன. எனவே, மாணவர்கள் புத்தகத்தில் இருக்கும் அனைத்து பாட பகுதிகளை புரிந்து படித்தால்தான், இதுபோன்ற கேள்விகள் தேர்வில் எழுத முடியும். இந்த கேள்விகளை தவிர, மற்ற கேள்விகள் எளிதாகதான் தயார் செய்யப்பட்டிருந்தன, இவ்வாறு அவர் கூறினார்.