TN Plus Two Supplementary Exam Result 2023 | dge.tn.gov.in | பிளஸ்2 துணைத்தேர்வு ரிசல்ட் 2023
TN Plus Two Supplementary Exam Result 2023
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற்ற ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) துணைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவினை, மதிப்பெண் பட்டியலாக (Statement of Marks) ஜூலை 24ம் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் முதல் இணையதளத்தில் இருந்து தங்களது தேர்வினை (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
Read Also: TN AD Government Exam Office Address District Wise
வழிமுறைகள் பின்வருமாறு –
தோ்வர்கள் வருகிற, ஜூலை 23ம் தேதி பிற்பகல் முதல் தமது மதிப்பெண் பட்டியலை
www.dge.tn.gov.in என்ற முகவரிக்குள் சென்று Result என்று வாசகத்தை Click செய்தால் தோன்று பக்கத்தில்
HSE Second Year Supplementary Exam, June/July 2023 - Result - Statement of Marks Download
என்ற வாசகத்தினை Click செய்து தேர்வர்கள் தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களை பதிவு செய்து, தங்களது மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை
ஜூன் /ஜூலை 2023, மேல்நிலை துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு 27.7.2023 மற்றும் 28.7.2023 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்ைட, மயிலாடுதுறை, செங்கல்பட்டு) முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வுகள் பதிவு செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல் கட்டணம்
ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 275
மறுகூட்டல் கட்டணம்
உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ 305
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) ரூ.205
குறிப்பு – விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல் –- II மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும். மறுகூட்டல் I கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பின்னர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.