TN Plus Two Supplementary Exam 2023 | பிளஸ் 2 துணைத்தேர்வு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
TN Plus Two Supplementary Exam 2023
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் நாளை முதல் (மே 11ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தே்ாவுத்துறை இயக்குநர் சா.சேதுராமாவர்மா வெளியிட்ட அறிவிப்பு - பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி தேர்வு ஜூன் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு எழுத விருப்பம் உள்ள பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் மே 17ம் தேதி வரை அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் மாவட்டம வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை தேர்வு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
Read Also: பிளஸ் 2 துணைத்தேர்வு அட்டவணை 2023
இதில் விண்ணப்பிக்க தவறுபவர்கள் மே 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம், விரிவான தேர்வு கால அட்டவணை வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை
www.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.