You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Plus Two Result Link 2023 | tnresult.nic.in | பிளஸ்2 ரிசல்ட் எப்படி பார்ப்பது

TN Plus Two Result Link 2023

TN Plus Two Result Link 2023 | tnresult.nic.in | பிளஸ்2 ரிசல்ட் எப்படி பார்ப்பது

TN Plus Two Result Link 2023

பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 முடிவுகள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று 8.3.2023 (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தோ்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் இணையதள முகவரி காணலாம்

Plus two Result Website Address (Direct Link)

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge.tn.gov.in

பிளஸ்2 ரிசல்ட் எப்படி பார்க்க வேண்டும்

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளாம்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Center) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகள் அன்றைய தினமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கவும் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

TN Plus Two Result Link 2023
TN Plus Two Result Link 2023
Read Also: அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒரு பார்வை

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு (2022-2023) கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 3ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வை 4,33,000 மாணவிகளும், 4,16,000 மாணவர்களும் மற்றும் 23,747 தனித்தேர்வர்களும் என 8.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த தேர்வு 3,324 மையங்களில் நடத்தப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தையொட்டி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி சமீபத்தில் முடிக்கப்பட்டன. பின்னர், பிளஸ் 2 ரிசல்ட் மே 5ம் தேதி வெளியிட கல்வித்துறை முடிவு செய்த நிலையில், நீட் தேர்வு மே 7ம் தேதி நடக்கவிருந்ததால், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Read Also: அனைத்து மாவட்ட தேர்வுத்துறை அலுவலக விவரம், தொலைபேசி எண்

தலைைம ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்

மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியா்கள் மே 8ம் தேதி அன்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பார்ஸ்வேர்டு பயன்படுத்தி, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை முற்பகல் 9.45 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

Read Also: எப்படி கல்லூரி படிப்பை தேர்வு செய்வது

கால் பன்னுங்க 14417

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்வியில் சேருவது குறித்த சந்தேகங்களை தீர்த்துகொள்ள 14417 என்ற உதவி எண்களை அழைக்கலாம் என்று பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் பாடப்பிரிவை எவ்வாறு தேர்வு செய்வது, கட் ஆப் மதிப்பெண் குழப்பம் உள்ளிட்டவற்றிகு தீர்வு அளிக்கும் வகையில் இந்த உதவி எண் வழங்கப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Also: சிறந்த கல்லூரி தேர்வு செய்வது எப்படி

கவலை வேண்டாமே...

மாணவர்களின் அடுத்தகட்டப் படிப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணித் தேர்வுகள் ஆகும். இதில் பலருக்கு வெற்றியும் உண்டு, சிலருக்கு தோல்வியும் கிடைக்கும். தேர்வு என்பதை நம் கற்றல் திறனை பரிசோதிக்கும் ஒரு அளவுகோல்தான். தேர்வை, வாழ்கையில் ஒப்பிடுவது தவறான ஒரு முன்னுதாரணம். தோ்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவலையடையாமல், நாம் அடுத்த தேர்வில் எப்படி தேர்ச்சி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அடுத்த கட்ட பணியை தொடங்குகள். மாறாக, தவறான முடிவுகள் எடுக்கக்கூடாது. உங்கள் சந்தேகங்கள், உதவிக்கு கல்வித்துறையின் இந்த தொலைபேசி எண்ணை 14417 தொடர்பு கொள்ளுங்கள், நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.