You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பிளஸ் 2 தேர்வு 4000 பறக்கும் படைகள் அமைப்பு

10th Supplementary exam hall tick download link 2025

அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான, பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இறுதி கட்ட பணிகளில் தேர்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கியுள்ளது. இத்தேர்வை 7.15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ேதர்வு எழுத உள்ளனர். பொதுத்தேர்வு குளறுபடியின்றி முறையாக நடைபெற ஏதுவாக பல்வேறு முன்னேற்பாடுகள் தேர்வுத்துறையால் செய்யப்பட்டுள்ளன. 

தமிழகம் முழுவதும் 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மட்டும் தலா 3,302 தேர்வு ைமயங்களும், 10ம் வகுப்புக்காக 4,107 மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது கடந்தஆண்டு விட அதிகம்.

முறைகேடு தடுக்க, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வுக்கு சில நாட்கள் உள்ள நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.