TN PLUS 2 Practical Exam | 12ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி 2023
TN PLUS 2 Practical Exam
அரசு தேர்வுகள் இயக்கத்தின் இயக்குனர் சா.சேதுராமவர்மா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற உள்ள மார்ச் / ஏப்ரல் 2023ல் பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 30.1.2023 திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னையில் நடக்கிறது.
Read Also: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் உருவாக்க உத்தரவு
மேலும், மார்ச்/ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வுகால அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வுகளை வரும் மார்ச் 7ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரையிலான நாட்களில் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.