TN plus 2 maths tough | கணித ஆசிரியர்கள் பரிதாபங்கள்
TN plus 2 maths tough
மார்ச் 2020 ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் +1 மற்றும் +2 கணித பாடம் வினாத்தாள் ஆனது மிகவும் கடினமாக அமைந்துள்ளது. ஆனால் 70 மதிப்பெண்கள் கொண்ட இயற்பியல் வேதியியல் உயிரியல் பாடங்கள் முற்றிலும் மாணவர்களுக்கு எளிமையாக கேட்கப்பட்டுள்ளது.
+1 வேதியியல் கொரோனா காரணமாக தேர்வு எழுதாமலே அனைத்து மாணவர்களுக்கு அரசாங்கம் தேர்ச்சி பெற வைத்துள்ளது. மேலும் வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் வழங்கி உள்ளது. 2021 ஆம் ஆண்டு எந்தவொரு பாடத்திற்கும் கொரோனா காரணமாக தேர்வு அரசாங்கம் வைக்கவில்லை. 2022ஆம் ஆண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் கணித பாடம் தவிர்த்து அனைத்து பாடங்களுக்கும் வினாத்தாள் மிகவும் எளிமையாக கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றார்கள்.
Read Also: அடிப்படை கணிதம் திணறும் மாணவர்கள்
முழு மதிப்பெண் அதிக மாணவர்கள பெற்றுள்ளனர். கணித பாடத்தை தவிர்த்து இப்படி இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கான வினாத்தாள் மிகவும் எளிமையாக கேட்கப்பட்டு அதிக மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுகிறார்கள். ஆனால் கணித பாடத்திற்கான வினாத்தாள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் இயற்பியல் வேதியியல் உயிரியல் ஆசிரியர்கள் முன்னிலையில் கணித ஆசிரியர்கள் வெட்கி தலை குனிய வேண்டிய நிலை உள்ளது. உண்மையில் கெத்துக்காக கணித வினாத்தாள் கடினமாக எடுத்து மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க முடியாத சூழ்நிலையில் மற்ற ஆசிரியர்கள் முன்னிலையில் அவமானம் பட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
இயற்பியல் வேதியியல் உயிரியல் பாடங்களுக்கான செய்முறை தேர்வு மதிப்பெண் ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. கணித பாடத்திற்கு செய்முறை தேர்வு மதிப்பெண் இல்லை. இதனால் இயற்பியல் வேதியியல் உயிரியல் ஆசிரியர்கள் கெத்தாக மாணவர்களுக்கு செய்முறை தேர்வில் முழு மதிப்பெண் தந்து விடுகிறார்கள். கணித பாடத்திற்கு எந்தவொரு செய்முறை தேர்வு இல்லாத சூழ்நிலையில் கணித பாட புத்தகத்தில் உள்ள அதிகப்படியான கணக்குகளை நடத்தி மாணவர்களுக்கு பயிற்சி அதிகளவு பயிற்சி அளித்து இறுதியில் கணித வினாத்தாள் மிகவும் கடினமாக அமைவதால் மாணவர்கள் கணித பாடத்தில் முழு மதிப்பெண் பெற முடியாமல் போகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் தேர்ச்சி பெற முடியாமலும் அதிக மதிப்பெண் பெற முடியாமலும் தவிக்கிறார்கள். இதனால் கணித ஆசிரியர்களின் மதிப்பு மரியாதை மற்ற ஆசிரியர்கள் முன்னிலையில் தானாகவே குறைகிறது. ஏன் இயற்பியல் வேதியியல் உயிரியல் பாடங்களுக்கான வினாத்தாள் மிகவும் கடினமாக எடுக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று தோன்றுகிறது. குறிப்பாக கணித பாடத்திற்கான வினாத்தாள் மட்டும் மிகவும் கடினமாக எடுக்க அரசாங்கம் ஏன் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. செய்முறை அல்லாத பாடம் என்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வில்லை. இதனால் தனியார் பள்ளி கணித ஆசிரியர்கள் ரிசல்ட் வரும் போது தனியார் பள்ளி நிர்வாகிகள் முன்னிலையில் அவமானம் பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள்.
இயற்பியல் வேதியியல் உயிரியல் ஆசிரியர்களுக்கு பாராட்டும் கணித ஆசிரியர்களுக்கு அவமானமும் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இது தான் கணித ஆசிரியர்களின் பரிதாபங்கள். இனி வரும் காலங்களில் கணித ஆசிரியர்களின் சூழ்நிலை மாறுமா?
இப்படிக்கு ஒரு கணித ஆசிரியன்…