TN Plus 2 Mark sheet 2023 | பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மே 12ல் பெறலாம்
TN Plus 2 Mark sheet 2023
அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 08.05.2023 அன்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ்2) பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து12.05.2023 முற்பகல் 11 மணி முதல்
www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID, PASSWORD-ஐக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கும், தனித்தேர்வர் தேர்வுமைய பள்ளித் தலைமையாசிரியர்கள் தமது மையத்தில் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கும் உரிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம் செய்து, அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து, தலைமையாசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டுத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
Read Also: அரசு கலை கல்லூரி அட்மிஷன் எப்போது
மேற்படி மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) 12.05.2023 முதலே பள்ளித் தேர்வர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும் / தனித் தேர்வர்களுக்கு தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும், விநியோகம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.