TN plus 2 Exam Result Date 2023 | பிளஸ் 2 ரிசல்ட் மே 8 வெளியீடு
TN Plus 2 Exam Result Date 2023
BREAKING NEWS: அரசு தேர்வுகள் இயக்கம், பிளஸ் 2 பொதுத் தேர்வு ரிசல்ட் மே 8ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வரும் மே 5 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், அதை நீட் தேர்வுக்கு பிறகு வெளியிடலாமா என
பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வந்தது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 10ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த பணியில் அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டர். இந்த பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து, மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Read Also: TN 10th English Exam false Questions
தொடர்ந்து ஏற்கனவே, திட்டமிட்டப்படி மே 5ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், மே 7ம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், நீட் தேர்வு முடித்த பிறகு பிளஸ் 2 வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவை நீட் தேர்வுக்குப் பிறகு வெளியிடலாமா என்று பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்து வந்தது.
இந்த நிலையில், சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, மே 7ம் தேதி மாலை ரிசல்ட் வெளியிடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மே 8ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.