TN Plus 2 Exam News | பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்
TN Plus 2 Exam News
விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 3 படித்து வரும் ஆற்காடு கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கும், மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அப்போது மாம்பழப்பட்டை சேர்ந்த மாணவர்கள் ஆற்காட்டை சேர்ந்த மாணவர்களை ரீப்பர் கட்டை, இரும்பு கம்பியால் திடீரென தாக்கினர். பதிலுக்கு ஆற்காடு மாணவர்களும் திரும்பி தாக்கினர்.
Read Also: பிளஸ் 2 தமிழ் தேர்வு கடினம்
இதில் ஒரு மாணவருக்கு தலையிலும், மற்றொரு மாணவனுக்கு உடலில் காயம் ஏற்பட்டது. உடனே ஆசிரியர்கள் விரைந்து சென்று இருதரப்பு மாணவர்களையும் சமாதானப்படுத்தி தேர்வறைக்குள் அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை அருகில் உள்ள காைண அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு அவர்களையும் பள்ளிக்கு அழைத்து தேர்வு எழுத வைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.