TN Phd Research Scholarship in Tamil | பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை
TN Phd Research Scholarship in Tamil
கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்களுக்கு படிப்பு உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான (2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை) முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை பெற தகுதிவாய்ந்த ஆராய்ச்சி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கும் பொருட்டு இத்திட்டம் தொடர்பான அறிவிக்கை தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான இறுதிநாள் 28.2.2032 ஆகும். அதன் விவரத்தினை கல்லூரி அறிவிப்பு பலகையில் வைக்குமாறும், தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெற அறிவுறுத்தமாறும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
Read Also: போட்டி தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும்
அதன்படி மாநில அரசின் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை பெற விரும்பும் தகுதியுள்ள ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களை அணுகி குறிப்பிட்ட படிவத்தில் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பத்தினை
www.tndce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TN Phd Research Scholarship Eligibility
- முதுநிலை/எம்பில்., பட்டப்படிப்பிற்கு பின்னா் அங்கீகரிக்கப்பட்ட முறையான முழுநேர ஆராய்ச்சி படிப்பில் ஏதேனும் ஒரு அரசு அல்லது அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரை பிஎச்டி படிப்பில் முதல் ஆண்ிடில் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். முந்தைய ஆண்டுகளில் 1.1.2021 முதல் 31.12.2021 முன்னதாக சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கூடாது.
- முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று முழுநேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் எம்பில், பட்டப்படிப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- எம்பில், தேர்ச்சி பெற்று முழுநேர ஆராய்ச்சி படிப்புகளில் பயிலும் மாணவர்கள் எம்பில் பட்டப்படிப்பு 60 சதவீத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- வேறு எந்த வகையான நிதி உதவி பெறுபவராக இருத்தல் கூடாது.
- பகுதிநேர ஆராய்ச்சி மாணவராக இருத்தல் கூடாது
- இத்திட்டத்தின் கீழ் 120 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.60,000 வழங்கப்படும்.
- பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை ஆராய்ச்சி படிப்பு வழிகாட்டியின் பரிந்துரையுடனும் கல்லூாி முதல்வர் மேலொப்பத்துடனும் கல்லூரி கல்வி இயக்குனர், சைதாப்பேட்டை, அண்ணா சாலை, IASE Campus, என்ற முகவரிக்கு 28.2.2023 தேதிக்குள் இவ்வலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்பிவைத்தல் வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பிறகு இவ்வலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் இல்லாமல் குறைபாடுகளுடன் பெறப்படின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன் அவற்றின் மீது எவ்வித கடித போக்குவரத்தும் வைத்துக்கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.