TN PET to appoint through promotion | உடற்கல்வி ஆய்வாளர் மாற்றுப்பணி கைவிடுக
TN PET to appoint through promotion
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் உள்ள முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்படாமல், மாற்றுபணி மூலமாக நிரப்பியதை எங்கள் சங்கம் சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. மேலும் மாற்றுபணி என்பதை ரத்து செய்ய வேண்டுகின்றோம். தமிழக முழுவதும் உள்ள மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகத்தை மூடிவிட்டு, முதன்மை கல்வி அலுவலகத்தில், ஒரு பணியாளர் போல செயல்பட செய்வதை ரத்து செய்ய எங்கள் சங்கம் சார்பாக வேண்டுகின்றோம்.
Read Also: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
மேலும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலக பணியாளர் பணியிடத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு, அரசு அதனை ஏற்றுகொள்ள கூடாது என்பதற்காகவும், அரசு மீது உடற்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என்பதை தங்களது கவனத்திற்கு எங்கள் சங்கம் சார்பாக கொண்டு வருகின்றேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.