TN Part Time Teachers Salary News | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு முக்கிய அறிவுரை
TN Part Time Teachers Salary News
மாநில திட்ட இயக்குனர் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் தற்காலிக தொகுப்பூதியத்தில் பணிபுாியும் பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ஒரு வாரத்திற்கு மூன்று அரை நாட்கள் வீதம் பணிபுரிந்தால் மட்டுமே அம்மாதத்திற்கான முழு ஊதியம் பெற இயலும். பள்ளி வேலை நாட்களில் விடுமுறை போன்ற காரணங்களால் பகுதி நேர பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கால அட்டவணையை பின்பற்றி 12 அரை நாட்கள் பணி செய்ய முடியாத சூழல் ஏற்படுமாயின் அதை அந்த மாதத்தில் பள்ளி செயல்படக்கூடிய மற்ற நாட்களில் பணி புரிந்து வேலை நாட்களாக ஈடுசெய்து கொள்ளலாம்.
Read Also: பகுதிநேர ஆசிரியர்கள் புறக்கணிப்பு - கல்வித்துறைக்கு கண்டனம்
எனவே ஒவ்வொரு கல்வி ஆண்டும் ஜூன் முதல் ஏப்ரல் மாதம் முடிய முழுமையாக நான்கு வாரங்களும் பள்ளிகள் செயல்பட இயலாத மாதங்களில் பகுதி நேர பயிற்றுநர்களை 12 அரை நாட்கள் பணி புரிவரை உறுதி செய்யும் வகையில் கல்வி சார்ந்த பணிகளில் அவர்களை மாணவர்களின் கலைதிறன் மற்றும் படைப்பாற்றல் திறன்களை வளர்க்கும் வகையில் பள்ளி செயல்படும் நாட்களில் 12 அரை நாட்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிவதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள், பகுதி நேர பயிற்றுநர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்திடுமாறு அறிவுரை வழங்கிடவும், பகுதி நேர பயிற்றுநர்கள் பணியாற்றாத நாட்களில் ஊதியம் பிடித்தம் செய்து வழங்கப்படும் என்பதால் விடுப்பு எடுத்த நாட்களுக்கு ஊதியம் வழங்க இயலாது. எனவே உரிய அறிவுரைகளை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.