TN Part-time teachers protest on September 25 | பகுதிநேர ஆசிாியர்கள் போராட்டம் அறிவிப்பு
TN Part-time teachers protest on September 25
திமுக தேர்தல் அறிக்கையில் 181 ஐ கூறியவாறு, தமிழக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, தமிழக பகுதிநேர ஆசிரியா்கள் செப்டம்பர் 25ம் தேதி முதல் டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கையில், தமிழக அரசு கடந்த 2012ஆம் ஆணடில், தமிழக மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் பொருட்டு உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஒவியம், ேதாட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியில் திறன் பாடப்பிரிவுகளுக்கு பகுதி நேர ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முறையான ஊதிய உயா்வு இல்லாமை, சொற்ப ஊதியம் உள்ளிட்ட காரணங்களால் பலர் பணியிலிருந்து விலகினர். இதற்கிடையில், கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கை எண் 181ன் ல் பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என முதலமைச்சர் அறிவித்தார். எவ்வித முன்னேற்றம் இல்லை.
இதையடுத்து, கடந்த காலங்கில் வாழ்வாதார பணிநிரந்தர கோரிக்கை வலியுறுத்தி முதலமைச்சர், கல்வி அமைச்சர் கவனத்தை பெறும் வகையில், பல கட்ட போரட்டம் நடந்தது. பின்னர் உயர் அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவில் பணி நிரந்தரம் அல்லது பணிபாதுகாப்புடன் முழு நேர பணி ரூபாய் 25,000 ஊதியம் என்ற வாக்குறுதி கொடுத்து இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்த கோரிக்கை வலியுறுத்தியும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் செப்டம்பர் 25ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்,
இவ்வாறு அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.