பணி நிரந்தரம் செய்ய கல்வி அமைச்சருக்கு நல்ல புத்தி கொடு தாயே என, ஆனைமலை மாசாணியம்மனுக்கு வேண்டுதல் சீட்டு வைத்து, பகுதிநேர ஆசிரியா்கள் நூதனமாக வேண்டுதல் வைத்துள்ளனர்.
16,549 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ 12,500 வழங்கப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் எனக்கூறியிருந்தது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை.Read Also: பகுதிநேர ஆசிரியா்கள், முன்பருவ கல்வி ஆசிரியர்கள் பட்ஜெட்டில் ஏமாற்றம்இதற்கிடையில், கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நீதி வேண்டி பக்தர்கள் பிரார்த்தனையை, வேண்டுதல் சீட்டில் எழுதி, அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்டால், இரு வாரங்களுக்குள் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதையறிந்த பகுதிநேர ஆசிரியர்கள் சிலர், தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டுமென, ஆனைமலை மாசாணியம்மனிடம் தமிழக முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிளுக்கு நல்ல புத்தி, சிந்தனை கொடுத்து, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, வேண்டுதல் சீட்டு எழுதி வைத்து வழிபட்டுள்ளனர்.