TN Part time BE Admission 2023 | பகுதிநேர பிஇ படிப்பு அட்மிஷன் 2023
TN Part time BE Admission 2023
பகுதிநேர பி.இ படிப்புக்கு வரும் ஜூலை 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் சார்பில் பகுதி நேரமாக பி.இ படிப்பு நடத்தப்படுகிறது. 4 ஆண்டு பட்டப்படிப்பான இது கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, (சிஐடி), அரசு தொழில்நுட்ப கல்லூரி (கோவை), சேலம், நெல்லை, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரிகள், வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய எட்டு அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது.
பகுதி நேர பி.இ படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகளை கோவையில் உள்ள கோயம்புத்தூர் தொழில்நுட்ப கல்லூரி ஒருங்கிணைத்து நடத்துகிறது. இநத் நிலையில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சோ்க்கைக்கு செவ்வாய் கிழமை (ஜூன் 27ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையவழியலான
www.ptbe.tnea.com விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள ஜூலை 23ம் தேதி கடைசி நாள் ஆகும்.
அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422-2590080, 94869 77757 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.