அரசு தேர்வுகள் இயக்ககம் இணை இயக்குனர் செல்வகுமார் இன்று வெளியிட்ட ெசய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை திட்டம் (என்என்எம்எஸ்) தேர்வு பிப்ரவரி 2ம் தேதி நடக்கிறது. இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவா்களின் பெயர்பட்டியலுடன் கூடிய வருகைதாட்கள் (nominal roll cum attendance sheet) தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 24.01.2024 (புதன்கிழமை) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒவ்ெவாரு தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளா்களும் தவறாமல் பெயா் பட்டியலினை பதிவிறக்கம் செய்து ெகாள்ள அறிவுறுத்தப்படுகிறது.
என்என்எம்எஸ் தேர்வு ஹால்டிக்கெட் டவுன்லோடு
தேர்விற்கான நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) 24.1.2024 புதன்கிழமை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான யூசர் ஐடி, பாஸ்வோர்டு கொண்டு பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கவும்,, தேர்வு மைய விவரத்தினை தெரிவிக்கவும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்்க வேண்டும்.
தேர்வுக்கூட நுழைவுசீட்டுக்களில் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, வகுப்பினம் ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினை குறிப்பிட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று, தேர்வு எழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.