செட் தேர்வை நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நோடல் அமைப்பு பல்கலைக்கழக மானியக்குழுவிடம் (யுஜிசி) அனுமதி பெற்றுள்ளதா என தெளிவுப்படுத்தக்கோரி நெட் செட் சங்கம் சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு அனுப்பியுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உதவிபேராசிரியர்களுக்கான தகுதித்தேர்வான செட் தேர்வினை நடத்துவதற்கு யுஜிசியானது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை நோடல் அமைப்பாக அறிவித்து தேர்வினை நடத்து அனுமதி வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் மனோன்மணியம் பல்கலைக்கழகம் செட் தேர்வு அறிவிப்பி வெளியிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் செட் தேர்விற்கு விண்ணப்பித்து, இந்த தேர்வினை கடந்தாண்டு ஜூன் 7, 8 எழுத இருந்த நிலையில் சில காரணங்களுக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செட் தேர்வினை கால வரைவு இன்றி ஒத்திப்போடுவதாக அறிவித்திருந்தது. தற்போது செட் தேர்வினை டிஆா்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக மாாச் மாதம் 6 முதல் 9ம் தேதி வரை யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் செட் தேர்வினை நடத்த இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்புகளில் யுஜிசி வழிகாட்டுதலின்படி செட் தேர்வு மட்டும் நடத்துவதாக மட்டுமே அறிவித்திருப்பது விண்ணப்பதாரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. டிஆர்பி செட் தேர்வினை நடத்துவதற்கு யுஜிசி நோடல் ஏஜென்சி என்ற அனுமதி பெற்றுள்ளதா என்பதை தெளிவாக விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும், இவ்வாறு சங்கம் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.