You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள் – சமூக நலத்துறை அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

Minister Jagadeeswari controversial speech

TN Minister Jagadeeswari controversial speech students head shaving

முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள் என்று தமிழ்நாடு அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அயன்ரெட்டியப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூகம் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, இன்றைய சிறுவர்கள் முடிவெட்டுவதை பார்த்தால் எனக்கு கஷ்டமாக உள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு போகிறவர்கள் போன்று முடியை வெட்டுவது கிடையாது. சிலர் ரௌடிகள் மாதிரி வெட்டுகிறார்கள்.

Read also: சாதிய பாகுபாடு புகார் ஆசிரியர் கைது

பள்ளி மாணவர்கள் முடி வெட்டுவதை சரி செய்ய வேண்டும். ஒழுங்காக முடி வெட்டும் குழந்தையை மட்டும் பள்ளிக்கு அனுமதியுங்கள். சரியாக வெட்டவில்லை என்றால் மொட்டை அடித்துவிடுங்கள். அதில் தவறே கிடையாது. நம் வீட்டு பிள்யைாக நினைத்து இதை சொல்கிறேன். முதல் தவறே அங்கிருந்துதான் தொடங்குகிறது. 

இரண்டாவது கணுக்காலுக்கு மேல் பேண்ட் போடுகிறார்கள். ஏதேனும் பிரச்னையில் சிக்கி, பள்ளி மாணவர்கள் காவல்நிலையம் சென்றால், அங்கே மாணவனின் தோற்றத்தை பார்த்தவுடன் அவரை தவறு செய்தவர்கள் என்று காவலர்கள் உறுதி செய்துவிடுகிறார்கள். 

இந்த காவலர்களின் தவறு எதுவும் இல்லை. மாணவரின் தோற்றம்தான் அவர்களை அப்படி உறுதி செய்ய வைக்கிறது. ஒருவரின் தோற்றம்தான் அவரின் குணத்தை காண்பிக்கிறது. மாணவர் தவறு செய்தாரா, இல்லையா என்பதெல்லாம் விசாரணைக்கு பிறகு முடிவாகும். ஆனால் பார்த்தவுடன் அவரின் தோற்றத்தால் தவறான எண்ணம் உருவாகிறது, என தெரிவித்தார். 

பள்ளி மாணவா்களுக்கு ஆசிரியர்களே மொட்டை அடித்து விடுங்கள் என்று அமைச்சர் பேசியதற்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்து வருகிறது.