You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

அரசு சட்ட கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் பணி வாய்ப்பு ஜன 31 முதல் விண்ணப்பிக்கலாம் – டிஆர்பி

Candidates expect TET exam date 2025 from TRB

அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வு ஜனவரி 31 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. பாடவாரியான காலிப்பணியிடங்கள் அவற்றுக்கான கல்வித்தகுதி, வயது, வரம்பு, ஆன்லைன் விண்ணப்ப முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

Read Also: சிவில் சர்வீஸ் தேர்வு மே 25ல் நடைபெறும்

இந்த பணிகளுக்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜனவரி 31ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.