ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து, உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை தொடர்வதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊரடங்கு உத்தரவுகள் தொடர்பாக நேற்று ஓரு உத்தரவு பிறக்கப்பட்டது. ஜனவரி 31ம் தேதி வரை அந்த முழு அளவிலான ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர் கல்வித்துறை சார்பில் ஒரு தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது. கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு ஜனவரி 31தேதி வரை விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு அதாவது பொங்கல் முடிந்து தொடங்குவதாக இருந்த அந்த தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக நேற்றைய தினம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், அந்த மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டும் நடைபெறுமா என்று ஒரு கேள்வி எழுந்தது. ஆனால் அந்த வகுப்புகள் மட்டும் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை மாணவர்களுக்கு ஹாலிடே என்ற அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் மாணவர்கள் தங்களுடைய வீடுகளிலேயே இருந்தபடி தேர்வுக்கு தயாராக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்த பிறகு, மாணவர்களுக்கு தேர்வு வைக்கப்படும் போது கட்டாயம் நேரடி தேர்வு வைக்கப்படும் என்று உயர் கல்வித் துறை சார்பில் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆன்லைன் முறையில் தேர்வு என்பது மாணவர்களுடைய அந்த முழு திறனை வெளிப்படுத்தக் கூடிய வகையிலே இல்லை, அதே நேரங்களில் பல இடங்களில் பல்வேறு பிரச்சினைகளும் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே மாணவர்களுக்கு இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்வுகள் வைக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு பேனா பேப்பர் கொண்டு எழுதக்கூடிய நேரடி தேர்வு நடைபெறும் என்றும், எனவே மாணவர்கள் அதற்கேற்றபடி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கக்கூடிய காரணத்தால் கல்லூரி மாணவர்களுக்கு அந்த வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படுகிறது வீட்டில் இருந்தபடியே அவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் இந்த விடுமுறையை நன்கு பயன்படுத்தி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது உயர் கல்வித்துறையின் உத்தரவாக இருக்கிறது.