You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Health Inspector Job Notification 2023 | mrb.tn.gov.in | சுகாதார ஆய்வாளா் பணியிடம் வரவேற்பு

Typing exam apply Tamil 2023

TN Health Inspector Job Notification 2023 | mrb.tn.gov.in | சுகாதார ஆய்வாளா் பணியிடம் வரவேற்பு

TN Health Inspector Job Notification 2023

தமிழகத்தில் காலியாக உள்ள1,066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள பணியி டங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, 1,021 உதவி மருத்துவர் பணியிடங்கள், 986 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் தொடர்ச்சியாக சுகாதார ஆய்வாளர் (நிலை-2) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்1,066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதற்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையிலான ஊதிய வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு பத்தாம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ்-2 வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கொண்ட ஹெல்த் ஒர்க்கர் (ஆண்), ஹெல்த் இன்ஸ்பெக்டர், சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்புகளில் (சான்றிதழ் அல்லது டிப்ளமோ) ஏதாவது ஒன்றை நிறைவு செய்து பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரருக்கு 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயது வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.300-ஆகவும், மற்றவர்களுக்கு ரூ.600-ஆகவும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையவழியில் விண்ணப்பிக்கும் போது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவு செய்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். கூடுதல் விவரங்க ளுக்கு எம்ஆர்பி இணையதளத்தையோ அல்லது 9840586582 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.