TN Half Yearly Examination Leave | பள்ளிகளுக்கு டிசம்பர் 24ம் தேதி விடுமுறை
TN Half Yearly Examination Leave
டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 15ல் அரையாண்டு தேர்வு துவங்கியது. இத்ேதர்வு வரும் 23ம் தேதி முடிகிறது. இதையடுத்து, டிசம்பர் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை 8 நாட்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2023, ஜனவரி 1ம் தேதி ஞாயிற்றுகிழமை பொது விடுமுறை (ஆங்கில புத்தாண்டு) நாளாகும். இதையடுத்து 9 நாள் விடுமுறை அறறிவிக்கப்பட்டு, ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என பள்ள கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், டிசம்பர் 23ல் அரையாண்டு தேர்வு முடிந்த பின், ஒரிரு நாட்களில் ஆசிரியர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டு, திருத்தும் பணி துவங்கிவிடும். ஆனால், ஜனவரி 2ம் தேதியே, அதாவது அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல்நாள் அன்றே, திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.