தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டிசம்பர் 10ம் தேதி முதல் பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு துவங்கி நடைபெற உள்ளது. அதேபோல் மற்ற வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் இந்த மாதத்தில் தொடங்கி, இந்த மாதத்தில் நிறைவடைகிறது. இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி குழந்தைகளின் நோட்டு, புத்தகம், அவரது கல்வி உபகரணங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, நிற்கதியாக உள்ளனர். அடுத்து என்ன செய்வதென்று தொியாமல், அரசின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புதுறை வெளியிட்ட இன்று வெளியிட்ட செய்தி அறிவிப்பில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவலின்படி, மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரையாண்டு தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும். மழையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு புதிய நோட்டுகள் வழங்கப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.