பள்ளி கல்வி இயக்குனர் ச கண்ணப்பன் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்விற்கான செய்முறைத் தேர்வுகளை வருகிற 02.12.2024 (திங்கள் கிழமை) முதல் 06.12.2024 (வெள்ளிக் கிழமை) க்குள் நடத்தி முடிக்கதக்க வகையில் தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றிக்கை அனுப்பி, அனைத்து பள்ளிகளிலும் மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.