அரையாண்டு தேர்வு விடுமுறை தள்ளிபோகலாம் என்ற செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை கடந்த டிசம்பர் 23ம் தேதி தொடங்கியது. பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ம் தேதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்ட நிலையில், பெரும்பாலான பள்ளிகள் இந்த உத்தரவை மதிக்காமல் சிறப்பு வகுப்புகள் நடத்தியது. இதற்கிடையில் இந்த வாரம் சனிக்கிழமை பள்ளி வேலை நாட்களாக இல்லாத காரணத்தால், ஒரு சிலர் இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக உள்ள நிலையில் அதாவது வியாழன் மற்றும் வெள்ளி, இந்த இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், வெளியூர் சென்றவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்ற கோரிக்கை செய்தியை இணையத்தில் பரவவிட்டனா். இந்த நிலையில், ஊடகங்களில் விடுமுறை நாட்கள் தள்ளிபோகலாம் என செய்தி தற்போது நிலையில், நாளை பள்ளிகள் விடுமுறையா அல்லது செயல்படுமா என்ற குழப்பம் அனைவரும் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தரப்பில் நாம் கேட்டபோது, இது பொய்யான தகவல் என்றும், பள்ளி விடுமுறை நீட்டிப்பு சம்மந்தமாக எந்த அதிகாரப்பூா்வமான தகவலை பள்ளி கல்வித்துறை வெளியிடவில்லை என கூறினர்.