ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தர பணி மற்றும் யுஜிசி சம்பளம் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய கவுரவ விரிவுரையாளா்கள் தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் நீதிமன்ற தீர்ப்பின்படி யுஜசி நிர்ணயம் செய்த ரூ 50000 சம்பளம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வகுப்பு புறக்கணித்து காலவரையற்ற வேைல நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read Also: கல்லூரி ஆசிரியர்களுக்கு எப்போது கலந்தாய்வு நடத்தப்படும்இந்த நிலையில் ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூாயில் கவுரவ விரிவையாளர்கள் சார்பாக பணி பாதுகாப்பு, யுஜிசி சம்பளம் ரூ 50000 நீதிமன்ற தீர்ப்பின்படி நடைமுறைப்படுத்துதல், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து காவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.