TN Government School Teacher Job | 10 ஆயிரத்தில் அரசு பள்ளிகளில் சூப்பர் வேலை
TN Government School Teacher Job
தமிழக பள்ளி கல்வித்துறை அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது 2021-22ம் கல்வியாண்டில் அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது 3,005 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: தற்காலிக ஆசிரியர் பணி தற்காலிகமாக நிறுத்தம்?
இதனை தொடர்ந்து, அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், மாணவர்களின் கல்வித்தரம் குறைய வாய்ப்பு உள்ளது என கருதி பள்ளி கல்வித்துறை 2,774 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வரலாறு, புவியியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் உள்ள காலிபணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அதன்படி, இந்த பணியிடங்கள் நிரப்ப தமிழக அரசு ரூ.13.87 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தகுதிவாய்ந்த நபர்களை, அந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களே கொண்டு குழு அமைத்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் அடிப்படையில் தற்காலிமாக நியமித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகல்வித்துறை, தற்காலிமாக நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, அவர்களை நியமனம் செய்யப்படும் நாளில் இருந்து ஐந்து மாதங்களுக்கு அல்லது நேரடி நியமனமாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படும் வரை இவற்றில் எது முந்தியோ அது வரை அவர்களது பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரம் அறிய பட்டதாரி ஆசிரியர்கள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகலாம். இவ்வாறு அதன் செய்திக்குறிப்பி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.