TN Government School Students Cycle Scheme | இலவச சைக்கிள் விரைவில் விநியோகம்
TN Government School Students Cycle Scheme
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துைற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்களில் வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார்.
Read Also: பள்ளி மாணவர்கள் பேருந்து பயண அட்டை
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டு தோறும் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2022-2023 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற 4,89,600 மாணவ, மாணவியருக்கு சுமார் 235.92 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. இதையொட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை நாளை காலை 10.30 மணியளவில், திருவல்லிக்கேனியில் உள்ள என்.கே.தி பெண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.
இதில் பள்ளி கல்வி அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து, பள்ளிகளில் அடுத்தடுத்த நாட்களில் மிதி வண்டி மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.