TN Government School Fund | அரசு பள்ளி நிதி எவ்வளவு
TN Government School Fund
மத்திய கல்வி அமைச்சகத்தின், திட்ட ஒப்புதல் குழுவின்படி ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி (சமக்ரா சிக்ஷா) பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு, தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மானியம் அல்லது நிதி வழங்கப்படுகிறது.
Read Also: NSS Social Work in Tamil
இந்த நிதிகள் பள்ளி மேலாண்மை குழு வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்.
குறிப்பாக, பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10 சதவீதம் முழு சுகாதார செயல்திட்ட இனங்களான பள்ளி வகுப்பறை, வளாகத் தூய்மை, சுகாதார பராமரித்தல், கை கழுவும் வசதி ஏற்படுத்துதல், தூய்மையான குடிநீர், மாணவர்கள் இடையே விழிப்புணர்வு மற்றும் நடத்தை மாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு இந்த நிதியினை குறிப்பாக கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் முறையாக கழிப்பறைகள் பயன்படுத்துதல், கழிவறைகள் சுத்தம் செய்ய தேவையான பொருட்களை வாங்குதல், தினமும் கழிவறைகளை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்தல், மாணவா்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து மாதம் ஒருமுறை விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் உள்ளிட்டவைகளை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளி நிதி
பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது.
ஒரு பள்ளியில் ஒன்று முதல் முப்பது மாணவர்கள் இருந்தால், ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. பள்ளியில் 31 மாணவர்கள் முதல் 100 மாணவா்கள் வரை இருந்தால் ரூ.25,000 வழங்கப்படுகிறது. 101 முதல் 250 வரை மாணவர்கள் இருந்தால், ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. 251 மாணவர்கள் முதல் ஆயிரம் மாணவர்கள் வரை இருந்தால், ரூ.75 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.

பள்ளி மேலாண்மைக் குழு செலவிடுவதற்கான நெறிமுறைகள்
ஒருங்கிணைந்த பள்ளி மான்ய பதிவேடு பள்ளி தகவல் பலகையில் ஒருங்கிணைந்த பள்ளி மானிய தொகை பெறப்பட்ட விவரம் ஆகியவற்றை தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும்
தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவினர்களுடனும் மற்றும் ஆசிரியர்களுடனும் கலந்து ஆலோசித்து இக்கல்வியாண்டில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேவைப் பட்டியல் தயாரித்தல் வேண்டும்.
அதற்கான உத்தேச செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு, அதனை தீர்மான பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு தீர்மான பதிவேட்டில் முறையாக பதிவு செய்தல் வேண்டும்.
மேற்கூறிய இனங்களில் பொருட்களில் வாங்குவதற்கு தேவைப்படும் தொகையினை எடுத்து பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானத்தின்படி அத்தியாவசியமான மற்றும் தரமான பொருட்களை கொள்முதல் விதிகளை பின்பற்றி வாங்கப்படுதல் வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மை குழு கணக்கர் பள்ளி பார்வையின்போது அப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ரொக்கப் பதிவேட்டில் பதிவு செய்வதற்கு ஏதுவாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வங்கி கணக்கு புத்தகம், ரொக்க பதிவேடு மற்றும் செலவு மேற்கொண்டதற்கான பற்று சீட்டுகளை பள்ளி மேலாண்மைக்குழு கணக்கரிடம் ஒத்திசைவு செய்தல் வேண்டும்.
நிதி ஆண்டு இறுதியில் ரொக்கக் கணக்குப் புத்தகம் இறுதி இருப்பு ஆகியவை கணக்காளரால் சரிபார்க்கப்பட்டு தலைமை ஆசிரியர் கையொப்பமிடுதல் வேண்டும்
பொருள் வாங்குதல்
அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் தேவையான பொருட்களை பட்டியலிட வேண்டும். அவ்வாறு பட்டியலிட்ட பொருட்களை அவசியமான பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளி மேலாண்மை குழுவின் தீர்மானத்தின்படி தரமான பொருட்கள் மட்டுமே வாங்கப்பட வேண்டும்.
பொருள்கள் வாங்கியமைக்கான பற்றுச்சீட்டுகள் பெறப்பட்டு வரிசையாக தேதி வாரியாக பத்திரமாக பராமரிக்கப்பட வேண்டும் ஒரு செலவினம் ரூ.500/-க்கு மேல் இருந்தால் அத்தகைய பற்றுச்சீ்ட்டுகளுக்கு டின் நம்பர் அவசியமாகும்.
தொகை பெறப்பட்டமை மற்றும் செலவு செய்யப்பட்டவை ரொக்க பதிவேட்டில் விவரங்களை பதிவு செய்வதுடன், ஒவ்வொரு மாதக் கடைசியிலும் ரொக்கப்பதிவேடு அப்ஸ்ட்ராக்ட்டில் தலைமை ஆசிரியர் கையொப்பமிட வேண்டும்.
வாங்கப்பட்ட பொருள்களின் விவரங்களை இருப்ப பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும். இருப்ப பதிவேட்டு பக்க எண் பற்று சீட்டில் பதியப்பட வேண்டும். ஒவ்வொரு பதிவிலும் தலைமை ஆசிரியர் கையொப்பமிட வேண்டும்.
மாவட்ட அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
மாநில திட்ட இயக்ககத்திலிருந்து நிதி வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டவுடன் மாவட்ட அளவில் உள்ள மாணவர் எண்ணிக்கை ஏற்ப அனுமதிப்பட்டுள்ள பள்ளிகளின் எஸ்எம்சிக்கு எஸ்என்ஏ மூலும் வரம்பு நிர்ணயம் செய்தல் வேண்டும்.
மேற்காண் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி பயன்பாடு சார்ந்த விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு எமிஸ் போர்டல் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.