TN Government Rs 1000 scheme | மகளிர் உரிமை தொகை திட்டம் எப்போது?
TN Government Rs 1000 scheme
மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை இன்று நடத்தினார்.
குறிப்பாக இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் இருந்து ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.
Read Also: கல்வி உதவித்தொகை மோசடி
குறிப்பாக, இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன் அடைய வேண்டும் என்றால் மகளிருக்கு 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் இத்திட்டத்தில் பயன்பெற முடியும், வேறு எந்த திட்டத்திலும் மகளிர் பயன் பெற்றிருக்ககூடாது, வருமானவரி செலுத்துபவராக இருக்கக்கூடாது, சாலையோர கடைகள் நடத்தும் மகளிர்கள் இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் உள்ளிட்ட விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தில் 1.05 கோடி பயனாளிகள் பயன் பெற உள்ளனர். இதனை முழுமையாக செயல்படுத்த, இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்கள் பயன்படுத்த உள்ளனர். இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ 7000 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது.