TN Government Free Television |வண்ண தொலைக்காட்சி கல்வித்துறைக்கு வழங்க முடிவு
TN Government Free Television
2006ம் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, பொதுமக்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சிகள் வழங்கப்படும் என திமுக அரசு வாக்குறுதி அளித்தது. அப்போது, வெற்றிபெற்ற, திமுக அரசு வண்ண தொலைக்காட்சி வழங்கப்பட்டன.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் குண்டுசாலை, வெளிச்செம்மண்டலம் உள்ளிட்ட இடங்களில் பயனாளிகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கியபோது, தேர்தல் அறிவிப்பு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் சமுதாய கூடத்தில் வைக்கபட்டிருந்தன.
Also Read: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொரோனா சர்வே
வண்ண தொலைக்காட்சி
தொடர்ந்து 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று, ஆட்சிக்கு வந்தபின், அந்த தொலைக்காட்சிகள் வழங்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. பலமுறை பொதுமக்கள் வழங்கு வேண்டும் என வலியுறுத்திய போதிலும், கோரிக்கை ஏற்கப்படவில்லை.
மேலும் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் இந்த தொலைக்காட்சி பெட்டிகளை கல்வித்துறை பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர். இதுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால், சமுதாய கூடத்தில் வைக்கப்பட்ட 2 ஆயிரம் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்காமல் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தபின், இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், வண்ண தொலைக்காட்சியை செயல்பாடு குறித்து ஆய்வு செய்த பின் மாவட்ட கல்வித்துறைக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும், சமுதாய கூடத்தை சீரமைப்பு பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.