TN Government Department Exam new procedure
தமிழ்நாடு அரசுப் பணிகளில் புதிதாக சேரும் பணியாளர்களுக்கு நடத்தப்படும் துறைத்தேர்வில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, வினாத்தாளில் கொள்குறி வகைப் பிரிவு நீக்கப்பட்டு விரித்தெழுதும் பிரிவு மட்டுமே இடம்பெற்றுள்ளது. தமிழக அரசில் புதிதாக பணியில் சேரும் அதிகாரிகள், பணியாளர்ள் உள்ளிட்டோர் இரு ஆண்டுகளுக்குள் துறைத்தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு இரண்டு வகையான தேர்வாக நடத்தப்படும்.ஒன்று வருவாய் துறையை மையமாக கொண்ட தேர்வு. மற்றொன்று தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுைறயை சார்ந்த தேர்வு. இவ்விரு வகை தேர்வுகளிலும் கொள்குறி வகை வினாக்கள் 40 சதவீதமும், புத்தகத்தை பார்த்து விரித்தெழுதும் வகையிலான வினாக்கள் 60 சதவீதமும் இடம்பெற்று வந்தன.
இந்த நிலையில் இந்த நடைமுறையை அரசு பணியாளா் தேர்வாணையம் திடீரென மாற்றியுள்ளது. அதன்படி, புத்தகத்தை பார்த்து வினாக்களுக்கு விடையளிக்கும் விரித்தெழுதும் பகுதி மட்டுமே முழுமையாக இடம்பெற்றுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற 100க்கு 45 மதிப்பெண்கள் பெற வேண்டும்.இதுகுறித்து உயர் அதிகாரிகள் கூறியதாவது, கொள்குறி வகை பிரிவு, விரித்ெதழுதும் பிரிவு என இரு பிரிவுகளாக ேதர்வு நடத்தப்பட்டபோது , கொள்குறி வகை பிரிவை மட்டுமே அரசு ஊழியா்கள் முழுமையாக பயன்படுத்தி தேர்வு எழுதி வந்தனர். விரித்தெழுதும் பிரிவை முழுமையாக பயன்படுத்தி தேர்வு எழுதவில்லை.
எனவே, அனைத்து வினாக்களுக்கு விரித்தெழுதும் பகுதியாக இருந்தால், தேர்வுக்கு தயாராகும் வகையில் அரசு ஊழியா்கள் புத்தகங்களை படிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டே, துறை தேர்வுகளில் விரித்தெழுதும் பகுதி முழுமையாக இடம்பெற்றுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.