அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23 C
Tamil Nadu
Sunday, December 10, 2023

TN Government College Admission 2022 | பிளஸ் 2 துணைத்தேர்வு தேர்ச்சி | அரசு கல்லூரியில் சேர வாய்ப்பு

TN Government College Admission 2022 | பிளஸ் 2 துணைத்தேர்வில் தேர்ச்சி | அரசு கல்லூரியில் சேர வாய்ப்பு

TN Government College Admission 2022

கல்லூரி கல்வி இயக்குனர் (முழு நேர கூடுதல் பொறுப்பு) ம ஈஸ்வரமூர்த்தி அனைத்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூயிருப்பதாவது,

உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட கல்லூரி கல்வித்துறை குறித்த ஆய்வு கூட்டத்தில், தற்போது பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-2023ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு விண்ணப்பங்களை நேரடியாக வழங்கி காலியிடங்களில் உரிய நடைமுறைகளை பின்பற்றி எதிர்வரும் 18.11.2022 வரை மாணவர்களை சேர்க்கை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

Read Also: பாரதியார் பல்கலைக்கழகம் தொலைத்தூர கல்வி

எனவே, அனைத்து மண்டல இணை இயக்குனர்கள் தங்கள் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு சுற்றறிக்கை மூலம் மேற்குறித்தவாறு, மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மற்றும் மாணவர் சேர்க்கை செய்யப்பட்ட விவரங்களை கல்லூரி கல்வித்துறையின் இணையதள முகவரியில் ஒருங்கிணைப்பட்ட படிவத்தில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவர்கள் இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்கள் உடனடியாக அந்தந்த கல்லூரிக்கு நேரடியாக சென்று, பாடப்பிரிவில் உள்ள காலியாக இடங்களை அறிந்து உடனடியாக கல்லூரி முதலாம் ஆண்டில் சேரலாம். இதனால், ஒரு வருட கால நேர வீரயத்தை மாணவர்கள் தவிர்க்க முடியும்.

Related Articles

Latest Posts