TN Engineering Colleges Closed |15 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டது
TN Engineering Colleges Closed
மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால், தமிழகத்தில் 16 பொறியியல் கல்லூரிகள் மூடப்போவதாக அறிவித்துள்ளன. நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 554 தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வந்த நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் நடத்திய ஆய்வில் சுமார் 40 பொறியியல் கல்லூரிகள் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த கல்லூரிகள் மூடப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்று சுமார் 500 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில், பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிக குறைந்த அளவே இருந்து வந்தது. இதனால், விதிகள் படி அந்த கல்லூரிகள் செயல்பட முடியவில்லை. மேலும், அந்த கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்காமல் தங்களிடம் இருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அண்ணா பல்கலைக்கழகத்திடமே ஒப்படைத்தன. பின்னர், அது அரசு ஒதுக்கீட்டு இடங்களாக மாற்றி கலந்தாய்வு நடத்தின.

தற்போது, பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடங்கிய நிலையில், 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டு மாணவர் சேர்க்கையின்போது, சுமார் 50 ஆயிரம் இடங்களில் மாணவர் சேர்க்கை இல்லை. இந்த ஆண்டு காலியிடங்கள் இன்னும் அதிகளவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக வேல்ராஜ் நியமனம்
இந்த நிலையில், 16 பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் தாங்களே முன்வந்து, மாணவர் சேர்க்கை இல்லை என்பதை சுட்டிக்காட்டி கல்லூரிகளை மூடப்போவதாகவும், கலந்தாய்வில் பங்கேற்கபோவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதுதவிர மேலும் 15 கல்லூரிகள் மூடும் மன நிலையில் உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.