TN Engineering College Latest News | 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் நிறுத்திவைப்பு
TN Engineering College Latest News
தமிழகத்தில் 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்திவைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டு ேதாறும் தங்களின் தொடர் அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சோ்க்கையை நடத்த முடியும்.
அந்த வகையில் நிகழாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடா் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த கல்லூரிகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு உள்பட ஆய்வு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடங்க அங்கீகாரம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
Read Also: Chat GPT என்றால் என்ன
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது, ஒரு கல்லூரியில் இருக்கும் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப பேராசிாியர்கள், ஆய்வகங்கள், நூலகம் உள்ளிட்ட தேவையான கட்டமைப்பு வசதிகள் இருப்பது அவசியமாகும். இந்த சூழலில் நிகழ் கல்வியாண்டுக்கான (2023-24) தொடா் அங்கீகாரம் அனுமதி கோரி 400க்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பித்தன. அவற்றில் 80 கல்லூரிகளில் முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதனால் அந்த கல்லூரிகளுக்கு தொடா் அங்கீகாரம் தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சார்ந்த கல்லூரிகள் விரைந்து கட்டமைப்பு வசதிகளை சரி செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 80 கல்லூரிகளில் நேரில் ஆய்வு செய்த பின்னரே அங்கீகாரம் வழங்கப்படும். அதன்பின்னும், தவறுகளை சரி செய்யாவிட்டால் அந்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் முழுமையாக ரத்து செய்யப்படும். அங்கு பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள வேறு கல்லூாிகளுக்கு மாற்றப்படுவா் என அவர்கள் தொிவித்துள்ளனர்.
முன்னதாக ஏற்கனவே இந்த ஆண்டு 6 பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.