தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், மாநில தேர்தல் ஆணையம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் தேதிகள் அறிவித்துள்ளது.
ஐந்து கட்ட பயிற்சி வகுப்பில் முதல் கட்ட பயிற்சி வகுப்பு வரும் 24ம் தேதி ஞாயிறன்று அன்றும், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு ஏப்ரல் 7ம் தேதி ஞாயிறன்றும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பது மட்டுமே ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உறுதியான விடுமுறை நாளாக உள்ளது. எனவே, அந்த விடுமுறை நாட்களிலும் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.வரும் 24ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழாவும், குருத்தோலை ஞாயிறு விழா என்பதாலும், மார்ச் 24ம் தேதி, ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் தேர்தல் பயிற்சி வகுப்புகளை பிறிதொரு நாளில் நடத்திட வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.