தமிழக சட்டமன்றம் 2021ம் பொது தேர்தலில் திராவிட முன்னேற்ற தலைமையிலான கூட்டணி கூட்சி அதிக தொகுதிகள் கைப்பற்றி, ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார். அனைத்து தரப்பிடம் இருந்து அன்பு வாழ்த்துகன் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு குவிய தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் பள்ளி பாதுகாப்பு சங்கம் தமிழகத்தின் புதிய முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அதன் மாநில தலைவர் என்.சந்திரசேகரன் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், தமிழக மக்களின் பேராதரவினை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் நல்லாட்சி வழங்கவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தன்னிகரில்லாத தலைவர் தளபதி மாண்புமிகு திரு. மு. க ஸ்டாலின் அவர்களுக்கு ஆசிரியர் சமுதாய சொந்தங்களின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோன்று ஆசிரியர் சங்கத்தினர் வாழ்த்துகள் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.