You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Education Budget Latest News 2023 | பட்ஜெட்டில் பந்தாடப்பட்ட ஆசிரியர்கள் - கடும் கண்டனம்

Typing exam apply Tamil 2023

TN Education Budget Latest News 2023 | பட்ஜெட்டில் பந்தாடப்பட்ட ஆசிரியர்கள் - கடும் கண்டனம்

TN Education Budget Latest News 2023

கல்வி மானிய கோரிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை இடம் பெற வில்லை-கலை ஆசிரியர் நலச்சங்கம் கண்டனம்

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்று11 ஆண்டுகளாக அரசு பள்ளியில் பணியாற்றும் நிலையில் அவர்களின் வாழ்வாதார கோரிக்கையான பணி நிரந்தரம் பற்றி தி.மு.க.தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப் படுவதாக ஆசை வார்த்தை காட்டியது தி.மு.க.அரசு.

ஒவ்வொரு பட்ஜெட் நேரத்திலும் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றத்தையே பகுதி நேர ஆசிரியர்கள் சந்திக்கின்றனர். தற்போது நடந்த கல்வி மானிய கோரிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் மனதில் இருக்கிறார்கள் அவர்கள் கோரிக்கை பரிசிலனையில் உள்ளது என கல்வி அமைச்சர் சட்டப்பேரவையில் கூறி கழுவுற மீனில் நலுவுற மீனாக உள்ளார்.  

Read Also: பள்ளி கல்வி மானிய கோரிக்கை ஆசிரியர்கள் அப்செட்

தி.மு.க.அரசு ஏமாற்றியதாக பகுதிநேர ஆசிரியர்கள் கவவை அடைந்துள்ளனர் மற்றும் பல ஆதங்க குரல் பதிவுகள் பகுதி நேர ஆசிரியர் குழுக்களில் வலம் வருகிறது.

மொத்தத்தில் கல்வி மானிய கோரிக்கையில் ஆசிரியர்கள் எந்த கோரிக்கையுமே இடம் பெறுவது இல்லை. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி பேசவே இல்லை, ஈட்டிய விடுப்பு ஒப்படைத்து பணம் பெறும் முறை ஓரங்கட்டப்பட்டது, ஓவியம், தையல், இசை இணைச்செயல்பாடு பாடத்திட்டம் கிடப்பில் போட்டு விட்டது. ஆசிரியர்கள் கோரிக்கை முற்றிலுமாக புறக்கணிக்க பட்ட பட்ஜெட் ஆக கல்வி மானிய கோரிக்கையில் ஏமாற்றமே மிச்சம்.

இவ்வாறு கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர் ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.