TN District Educational Officer Latest News | மாவட்ட கல்வி அலுவலருக்கு சிறை
TN District Educational Officer Latest News
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத காரணத்தால் முன்னாள் கல்வி அலுவலருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விரைந்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத சிவகங்கை மாவட்டம் முன்னாள் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்திக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டது. மாவட்ட கல்வி அலுவலருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தண்டனை நிறுத்தி வைக்க கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று நீதிபதி இரண்டு வாரத்திற்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்திரவிட்டார்.