TN DGE Administration | அரசு தேர்வுகள் இயக்ககம் நிர்வாகம்
TN DGE Administration
தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் அரசுத்தேர்வுகள் இயக்ககம் செயல்படுகிறது. இந்த இயக்ககத்திற்கு இயக்குனர் ஒருவர் உள்ளார். அதன் கீழ் இணை இயக்குனர் (பணியாளர்) மற்றும் இணை இயக்குனர் ( மேல்நிலை‘) என இருவர் உள்ளனர்.
இந்த இருவருக்கு கீழ் துணை இயக்குனர்கள் (பொது), துணை இயக்குனர் (தொழில்நுட்பம்), மண்டல துணை இயக்குனர்கள் என மூன்று பேர் உள்ளனர். இவர்களுக்கு கீழ், அரசு தேர்வுகள் இயக்குனர்களின் செயலாளர், அதன் கீழ் கூடுதல் செயலாளர் (மேல்நிலை), கூடுதல் செயலாளர் (மெட்ரிக்), கூடுதல் செயலாளர் (தொழில்நுட்பம்), கூடுதல் செயலாளர் (ஈ.எஸ்.எல்.சி) ஆகியோர் செயல்படுகின்றனர்.
READ ALSO: எட்டாம் வகுப்பு பொது தேர்வு கட்டணம் என்ன?
மேலும், இவர்களுக்கு கீழ், நேர்முக உதவி அலுவலர் (மேல்நிலை), நேர்முக உதவி அலுவலர் (இடைநிலை), நேர்முக உதவி அலுவலர் (பொது), மதிப்பெண் பதிவேடுகள் பொறுப்பாளர் (மேல்நிலை), மதிப்பெண் பதிவேடு பொறுப்பாளர் (இடைநிலை), மதிப்பெண் பதிவேடு பொறுப்பாளர் (பொது) ஆகியோர் உள்ளனர்.
அதன்கீழ் திட்டமிடுநர், தொடர்பு அலுவலர், கணக்கு அலுவலர், உதவி அலுவலர்கள் இருப்பார்கள்.
கண்காணிப்பாளர்கள் கீழ் உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.
அரசு தேர்வுகள் மண்டல அலுவலகம்
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் கீழ் ஏழு மண்டல அலுவலகங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, கடலூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் செயல்படுகின்றன.
மண்டல துணை இயக்குனர் கீழ் மண்டல துணை இயக்குனர் செயலாளர்களின் உள்ளனர்.
செயலாளர் கீழ் கண்காணிப்பாளர் இருப்பார், கண்காணிப்பாளர் கீழ் தவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.
Comments are closed.