TN Computer Science Graduate Teacher Latest News | கணினி ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றக்கோரி மனு
TN Computer Science Graduate Teacher Latest News
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆசிரியர் மனசு திட்டத்தின் வழியே மனு அளித்தனர்.
சங்க நிர்வாகிகள் குமரேசன் தலைமையிலான பட்டதாரிகள் ஆசிாியர் மனசு திட்ட அலுவலகத்தில் சிகரம் சதிஷிடம் தங்களது கோரிக்கை மனுவை இன்று வழங்கினர். இதுதொடர்பாக, கல்வி அமைச்சர் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார். ஆட்சி மாற்றத்திற்கு பின், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்னா், பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கோரிக்கை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியின் இறுதிகால கட்டத்தில்கூட, கணினி அறிவியல் பாட திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கான குழுவும் அமைக்கப்பட்டது. பின்னர், அந்த குழுவும் அடியோடு முடங்கியது. அதனை தொடர்ந்து, தங்களது கோரிக்கை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து திமுகவிடம் வலியுறுத்தி வருகின்றனர்.