அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு, 04.08.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.
இத்தேர்வில்1,03,756 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர். இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000/- வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக ரூ.10,000/- வழங்கப்படும். இத்தேர்வின் முடிவுகள் 6.11.2024 அன்று வெளியிடப்பட உள்ளது. Read also: இலக்கிய திறனறி தேர்வு என்றால் என்ன?இத்தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். மேலும் ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியல் other Examination → TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.