TN CM Latest News in Tamil | அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஸ்டாலின் ஓட்டுகளை இழந்துவிட்டார்
TN CM Latest News in Tamil
கிருஷ்ணகிரி, ஒசூரில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.
பின்னர், அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பான ஐபெட்டோ செயலர் அண்ணாமலை, அளித்த பேட்டி, ஆசிரியர் பணி கற்பித்தல் பணி. திராவிட மாடல் அரசு, பள்ளி கல்வித்துறையை புள்ளி விபர துறையாக மாற்றியுள்ளது.
எமிஸ் இணையதளம் மற்றும் கொரோனா காலத்தில் கொண்டு வந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலமாக ஆசிரியர்களை அன்றாடம் சித்ரவதை செய்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி நல்லதும் செய்யவில்லை, கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. ஆசிரியர்களை சித்ரவதை செய்யும் அதிகாரிகள் குறித்து கூறினாலும், முதல்வர் பள்ளி கல்வித்துறையை கண்டுகொள்வதில்லை. எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். எமிஸ் இணையதளத்தை யாரையாவது வைத்து பார்த்துக்கொள்ளுங்கள். ஆசிரியர்களை விட்டுவிடுங்கள்.
இல்லாவிடில், ஒட்டுமொத்த ஆசிரியர்கள் கற்பித்த பணியை மட்டுமே செய்வோம். அதனால், எந்த பாதிப்பு வந்தாலும் தாங்கி கொள்வோம்.
ஆசிாியா்கள், அரசு ஊழியர்கள், ஒய்வூதியதாரர்களின் 90 சதவீத ஒட்டுகளை கருணாநிதி நிரந்தரமாக வைத்திருந்தார். ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒய்வூதியதாரர்களின் ஒட்டுகளை முதல்வர் ஸ்டாலின் இழந்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.