பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை முதல் அமைச்சர் நடத்த உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை வரும் 8ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அவர் தனது எகஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 8ம் தேதி பள்ளி கல்வித்துறை சாாந்த ஆய்வுக்கூட்டத்தை நடத்த உள்ளார். அதனை முன்னிட்டு, எனது தலைமையில் பள்ளி கல்வி இயக்கங்களின் இயக்குநர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டோம், இவ்வாறு அவர் கூறியுள்ளார்