TN Chief Minister Talent Search Exam Result 2025:
தமிழகத்தில் 11 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வை நடத்தி வருகிறது. இதில் வெற்றிபெறும் 1000 மாணவர்களுக்கு தலா ரூ1000 மாதந்தோறும் வழங்கப்படும். இத்தேர்வு ஜனவரி 25ம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் நாளை (வியாழக்கிழமை 12/6/2025) வெளியாகிறது. தேர்வு முடிவுகள் மாணவர்கள் எப்படி தெரிந்துகொள்வது என்பது குறித்து பார்ப்போம்.தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2025
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 11ம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஜனவரி 25ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்தியது.இத்தேர்வை, 1,43,351 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் ஜூன் 12ம் தேதி வெளியாகிறது.மாதம் ரூ 1000 ஊக்கத்தொகை
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர்களில் 500 மாணவர் மற்றும் 500 மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்கள் என மொத்தம் ரூ 10,000 வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் எப்படி பார்ப்பது
இத்தேர்வின் முடிவுகள் அரசு தேர்வுக் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகிறது.படி 1: மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்படி 2: அங்கு முகப்பு பக்கத்தில் ‘Result’ என்று இருப்பதை கிளிக் செய்யவும் படி 3: அதில் TN Chief Minister Talent Search Exam என்பதை கிளிக் செய்யவும்.படி 4: மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டவும். படி 5: இறுதியாக தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்படி 6: அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.உதவித்தொகைக்கான பட்டியலை இந்த இணையதளத்தில் the Examination கீழ் Tamil Nadu Chief Minister Talent Search Examination என்ற பக்கத்தில் வெளியிடப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2025 முடிவுகளை மேல் குறிப்பிட்ட விவரங்கள்படி மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.