You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Chief Inspector of Physical Education suspend | முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்

TN Chief Inspector of Physical Education suspend

TN Chief Inspector of Physical Education suspend | முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்

TN Chief Inspector of Physical Education suspend

தமிழ்நாடு பட்டயச் சான்றிதழ் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் பள்ளிக்கல்வியில் பணியாற்றும்  முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்( Men) அவர்களை  தற்காலிக பணிநீக்கம் செய்ததை எங்கள் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். தேசிய அளவில் டில்லியில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு அணியினை  அனுப்ப இயலாததற்கு காரணம் பள்ளிக்கல்வி துறை   மூலம் நிதி வழங்க வில்லை. இதனால் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (NSS) அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் இது தொடர்பாக எந்த தகவலும் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் அவர்களுக்கு அனுப்பவில்லை.

நிதி வராத காரணத்தால் டில்லியில் நடக்கும் (SGFI) விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்ப இயலாது இருந்தது என்று எல்லோறுக்கும் தெரியும். ஆனால் தற்போது நிதி ஒதுக்க முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பொருப்பு என கருதி உள்ளது கல்வி துறை. வருடாவருடம் கல்விதுறையில் விளையாடிற்கு நிதி ஒதுக்கீடு என்பது எப்போது ஒதுக்கப்படுகிறது என்பதும் தெரிந்ததே.

Read Also: பள்ளி கல்வி ஆணையர் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்

மேலும் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றால் ஊக்க படுத்த கல்விதுறை வழங்கிவந்த ஊக்குவிப்பு நிதி நிருத்தபட்டது (கொரண காலத்திற்கு முன்பே) இது சார்ந்து அப்போதைய பொருப்பில் இருந்த அதிகாரியிடம் சங்கங்கள் தெரிவித்தும் இத்தனை ஆண்டுகளாக ஏண் நடவடிக்கைகள் இல்லை என்றும் நிதி சார்ந்த பிரச்சனைக்கு அப்போது பணியில் இருந்தவர்கள் மேல் நடவடிக்கை இல்லை என்பதை தங்கள் கவணத்திற்க்கு கொண்டுவருகிறோம்.

இந்த வருடம் நிதி ஒதுக்கீடு எப்ரல் 2023 நிதி ஏன் ஒதுக்கப்படவில்லை என்பது யாருக்கும் தெரியாது. கடந்த ஆண்டு 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களையும் நிதி இல்லாத காரணத்தினால் விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்பவில்லை. இதற்கு யார் காரணம் என்று பள்ளிக்கல்விக்கு நன்றாக தெரியும். தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பள்ளிக்கல்வி இணை இயக்குநர் மற்றும் இயக்குநர் அவர்கள் சொல்லக் கூடிய பணிகளை மட்டும் செய்வார்.

வழக்கமாக ஐனவரி மாதத்தில் நடத்தவேண்டிய SGFI போட்டியானது அந்த குழுமத்திற்கு உள்பிரச்சனை மற்றும் நிர்வாக பிரச்சினை காரணமாக இடையில் நடத்தாமலும், இந்த வருடம் காலம் தாழ்த்தி தற்போது நடத்திவரும்  நிலையில் இந்த குழுமத்திற்கு வருடவரும் கட்டவேண்டிய சந்த கடந்த 5  வருடங்களாக கட்ட தவறியது கல்வித்துறை என்று தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியில் பதவி உயர்வின் மூலம்  5 மாதங்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்தார். அதற்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ல் பணிபுரிந்து வந்தார். இது வரையில் CIPE பதவி உயர்வு பெற்று பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை அவருக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்க வில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். பள்ளிக்கல்வியில் பணியாற்றும் சில அதிகாரிகள் செய்த தவறுகளை மூடி மறைக்கவும், அரசியல் தலைவர்களின் ஊடகச் செய்திகளை மறைக்கவும் அவரை பணி நீக்கம் செய்து உள்ளார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

இந்தப் பிரச்சனைகளுக்கு முழு காரணம் பள்ளிக்கல்வி துறை தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே எந்த தவறும் செய்யாத முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் அவர்களின் தற்காலிக பணியிடை நீக்கம் ஆணையை  ரத்து செய்ய வேண்டும். அதே நேரத்தில் இந்த தவறினை யார் செய்தார்கள் என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.