TN CEO Transfer 2023 | முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்
TN CEO Transfer 2023
பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி முதன்மை கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து சற்று முன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் முதன்மை கல்வி அலுவலா், கே முனுசாமி, டிஆர்பி துணை இயக்குனராக மாற்றம், சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர், ஆர் சுவாமிநாதன், தொடக்க கல்வி இயக்ககம் துணை இயக்குனராக (சட்டம்) மாற்றம், கடலூா் முதன்மை கல்வி அலுவலர் இராமகிருஷ்ணன், தஞ்சாவூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் ஆறுமுகம், முதன்மை கல்வி அலுவலா் செங்கல்பட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், கோவில்பட்டி டிஇஒ (தொடக்க கல்வி) சின்னராஜூ, திருநெல்வேலி சிஇஒ ஆக பதவி உயர்வு, திண்டிவனம் டிஇஒ மணிமொழி, வேலூர் சிஇஒ ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது, விருதுநகர் டிஇஒ (தொடக்க கல்வி) இந்திராணி, தேனி சிஇஒ ஆக பதவி உயர்வு, அரியலூார் டிஇஒ (தொடக்க கல்வி) அம்பிகாபதி, சிஇஒ சிவகங்கை, காஞ்சிபுரம் டிஇஒ (தொடக்க கல்வி) முனிசுப்புராயன், சிஇஒ திருப்பத்தூா், கோபிசெட்டிபாளையம் டிஇஒ (தொடக்க கல்வி) கே பழனி, கடலூர் சிஇஒ, நீலகிரி டிஇஒ (தொடக் கல்வி), கீதா, நீலகிரி சிஇஒ ஆக நியமனம்.